பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.

பிள்ளையார் நம் பாரதம் முழுவதும் வணங்கப்படும் சாமி.
தொல்காப்பியத்திலும் புறநானூறிலும் கூட பிள்ளையார் குறித்து குறிப்புகள் உள்ளதென அறிஞர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில் செந்தூரம் பூசப்பட்ட ஆனைத்தலை வடிவங்கள் கிடைத்துள்ளன.

எந்த நல்ல காரியம் செய்வதானாலும் பிள்ளையாரை வணங்கி தொடங்குவது தமிழர் மரபு ஆகும். இன்று அது பாரதம் முழுவதும் ஏற்கப்பட்டுள்ள மரபாகியுள்ளது. தமிழ் குழந்தைகள் அனைவருக்குமே அன்பு பாட்டி முதுபெரும் மூதாட்டி ஔவையார். அந்த அமுதின் இனிய சொற்களை நமக்கு வழங்கிய பாட்டி வணங்கிய தெய்வம் பிள்ளையார்.
இவரது தெய்வத் திருவடிவம் பல சத்திய தத்துவங்களை காட்டுவதாக அமைகிறது. இது குறித்து சிலை வழிபாடு குறித்த பதிவில் பின்னர் விளக்கமாக பார்க்கப்போகிறோம். முந்தி முந்தி விநாயகர் தொந்தி கணபதி தும்பிக்கை நாதர் தாள் வணங்கி இந்த எளிய பணியை தொடங்குகிறேன்.
2 Comments:
புள்ளையார் பால்குடிச்சது உண்மையாங்கோ ??
இல்லை. பிள்ளையார் பால் குடித்ததை நம்பவில்லை. capillarity action, வதந்தி மற்றும் நம்பிக்கைப் பார்வை இணைந்து உருவாக்கிய நிகழ்வாக காண்கிறேன். இந்த பரபரப்பு சுயநல முழு-வர்த்தகமயமான யுகத்திலும் தாம் வணங்கும் கடவுளுக்காக வரிசையில் பலமணி நேரம் நின்று பாலினை கொடுத்த மக்களின் இந்த 'கொடுக்கும் தன்மையை' இந்த சமுதாயம் தன் ஒடுக்கப்பட்ட சகோதரர்களில் இறைவனை கண்டிடும்படி திருப்பிட விழைகிறேன்.செந்தழல் ரவி தங்கள் கேள்விக்கு நன்றி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home